விடுகதைகள்


                விடுகதைகள்


விடுகதை என்பது வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கு என்று கருதக்கூடாது. ஆனால் அதுவும் நம் சிந்திக்கும் திறனை தூண்டி விந்தை புரிந்து மகிழ்ச்சி தரவல்லது. சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து பருவத்தினரும் விடுகதைகள் சொல்வதிலும் அதனை விடுவிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.  விடுகதை எதுகை மோனையோடு கவிதை வடிவில் படிப்பதற்கும் கேட்பதற்கும் பேரின்பம் தரக்கூடியது


விடுகதைகள்

{விடைள் கீழே} 


1. பட்டு     சட்டை போட்டவன்

பார்க்க   அழகு   கொண்டவன்

தட்டி  மேலே     பறப்பவன்

தாவித்   தேனைக்  குடிப்பவன்.  அவன்    யார்?

    

2. ஒளி   கொடுக்கும்   விளக்கல்ல

வெப்பம்   கொடுக்கும்   நெருப்பல்ல

பளபளக்கும்   தங்கமல்ல

அது  என்ன?



3. மீன்  பிடிக்கத்  தெரியாது

ஆனால்  வலை  பின்னுவான்

அவன்  யார்?


4. ஒட்டி  வளர்ந்தாலும்

அவனை  வெட்டி எறிவோம்

அவன்    யார்? 



5. ஒரு   எழுத்து எழுத உதவும்

  அது   என்ன?




6. விதை    இல்லாத  செடி

மழையில்  பிறந்து   வெயிலில்  காயுது

அதுஎன்ன?



7. ஒரு சாண்  குதிரைக்கு  உடம்பெல்லாம்  பல்


அது  என்ன?


8. குடிக்க  உதவாத   நீர்

குளத்தில்  இல்லாத    நீர்

கையால்   தொடாத  நீர்

அது   என்ன?


9. வெள்ளை  மாடு  வாலால்  நீர்  குடிக்கும் 

அது  என்ன?



10.  தாய்  இனிப்பாள்
    மகள்  புளிப்பாள்
    பேத்தி  மணப்பாள். அது  என்ன?


11. வேண்டுதலுக்கு  இவனை
    விசிறியடிப்பார்கள்
     அவன்யார்?

12.  வெளியில்  இருப்பவனைத்  தொட்டால்
உள்ளே  இருப்பவன்  அலறுகிறான்.
அது  என்ன?

13. நாலு  கால்  உந்திவர
இரண்டு  முறம்  புடைத்து  வர
துடுப்பு  துழாவி  வர
துரை  மக்கள்  ஏறி  வர
அது  என்ன?

14. குடை  போல்  உடலிருக்கும்
குந்தி  குந்தித்தான்  நடக்கும்
நான்கு  கால்கள்  உண்டு
நடையோ  பின்  தங்கும்
அது  என்ன?

15. உலர்ந்த  காம்பில்  விரிந்தபூ.
அது  என்ன?


16. இடி  இடிக்கும்
மின்னல்   மின்னும்
ஆனால்  மழை  பெய்யாது
அது  என்ன?

17. உயிரில்லை  ஊருக்குப்  போவான்
காலில்லை  வீட்டுக்குப்  போவான்
அது  என்ன?

18. அம்மா  கொடுத்த  தட்டில்   நீர்ஒட்டவில்லை.  
அது என்ன?

19. ஆயிரம்  தச்சர்  கூடி
அழகான  மண்டபம்   கட்டி
ஒருவன்  கண்  பட்டு
உடைந்ததாம்  மண்டபம்.

அது   என்ன?


20. அண்ணனுக்கு  எட்டாது
தம்பிக்கு  எட்டும்
அது  என்ன?

21.  அப்பா  காசை  எண்ண  முடியாது
அம்மா  புடவை  மடிக்க  முடியாது.
அவை  என்ன?

22. வெள்ளைமாடும்  கறுப்புமாடும்
ஆத்துக்குப்  போகுது
கறுப்புமாடு  ஆத்தோடு  போகுது
வெள்ளைமாடு  வீட்டுக்கு  வருது.
அது  என்ன?

23.  மஞ்சள்  போர்வை  போர்த்தி
மறைந்திருப்பான்   வெள்ளையன்
கொஞ்சம்  போர்வை  களைந்தால்
கொதிக்கும்  நீரில்  விழுவான்.
அவன்  யார்?

24.  மூக்கைத்  தட்டி  வாயில்  போட்டேன்
    அது  என்ன?

25.  ஏறாத  கொடியிலே  ஏழாயிரம்  மணிகள்.
    அது  என்ன?

26.  எரிப்பவன்  ஆனால்  எரியாதவன்.
    அவன்  யார்?


27.  ஐயனைவிட்டுப்பையன்போகமாட்டான்
பையனைவிட்டுஐயனும்பிரியமாட்டான்.
அதுஎன்ன?


28. கம்பியிலே  நடப்பான்,   காண  முடியாது
   வீடு  புகுந்து  விளையாடுவான்
   தொட்டு  விளையாட  முடியாது.
       அது  என்ன?

29.  கருப்பு  சட்டைக்காரன்
     காவலுக்கு  கெட்டிக்காரன்
     அவன்  யார்?

30.  சட்டை   அவிழ்க்க    அவிழ்க்க
மறு   சட்டை  வந்து  கொண்டே  இருக்கும்
அது  என்ன?

31. குயவன்  செய்யாத   பானை
மழை  பெய்யாமல்   தண்ணீர்
வண்ணான்  வெளுக்காத  வெள்ளை
அது  என்ன?


32. வானத்தில் பறக்கும்பறவையல்ல
   வட்டமிட்டுச் சுற்றும்விமானமல்ல
   அது என்ன?

33. விதையில்லாமல் விளைவது  என்ன?
   வெட்டாமல்  சாயுதேஅதுஎன்ன?

34. விண்ணின்  வீதியில் விளையாடிச்  சிரிப்பவன்;
   மண்ணில் மாந்தரின் கண்ணையும்  பறிப்பவன் –            அதுயார்?

35. வானத்தை  நான்காக  மடித்து
   மலையை  நான்காக  வெட்டி
   நிலவைத்  தடவி  வாயில்  போட்டால்
   இரத்தம்  வரும் . அவை  என்ன?

36. வானம்  விடும்கண்ணீர்எது?


37.  மண்ணுக்குள்  இருக்கும்  மாயாண்டி
    உரிக்க  உரிக்கத்  தோலாண்டி. அதுயார்?

38. பச்சை மலை, பஞ்சு மலை, ஒரு  மலை
   ஒரு  குளம்அதுஎன்ன?

39. பச்சை  நிறத்தழகி
   பவளம் போல் மூக்கழகி
   கொச்சை  மொழி பேசிக்  காற்றாய்ப்
   பறந்து  விடுவாள்.  அவள்  யார்?

40.  பக்கத்தில்  இருப்பான்
    படுத்தால்  மறைவான். அது யார்?

41.. பார்த்தால்  கல்
   பல்  பட்டால்  தண்ணீர். அது என்ன?


42. பாளை  போல்  பூபூக்கும்
   பார்த்தவர்  விரும்பும்  பூ
   தலையில்  சூடாத  பூ
   அது  என்ன?



-------------------------------------------------------------------------------------------


விடை:

1. பட்டாம்பூச்சி


2. சூரியன்

3. சிலந்தி



4. நகம்


5. கை

6. காளான்




7. சீப்பு

8. கானல்நீர்

9. விளக்குத்திரி


10.  பால் , தயிர், நெய்

11.  தேங்காய்

12  அழைப்புமணி

13.  யானை

14.  ஆமை

15.  குடை

16.  பட்டாசு

17.  கடிதம்

18.  தாமரைஇலை


19.  தேன்கூடு

20.  உதடு

21.  நட்சத்திரங்கள்வானம்

22.  உளுந்து

23.  நெல்அரிசி

24.  வேர்க்கடலை

25.  கேழ்வரகுக்கதிர்

26.  சூரியன்

27.  நிழல்

28.  மின்சாரம்

29.  பூட்டு

30.  வெங்காயம்


31.  தேங்காய்



32.  பட்டம்

33.  வாழை

34.  இடி

35.  வெற்றிலை , பாக்கு, சுண்ணாம்பு

36.  மழை

37.  வெங்காயம்

38.  தேங்காய்

39.  பச்சைக்கிளி

40.  நம்நிழல்

41.  பனிக்கட்டி

42.  வாழைப்பூ





2 comments:

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...