மூளைக்கு வேலை- சிந்தனைப் புதிர்
1.
ஒருவருக்கு
4 பிள்ளைகள். அவர் வீட்டிற்குவந்த நண்பர் பிள்ளைகளின் வயதைக் கேட்டார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் புதிர் போட்டார். அதாவது நால்வரின் வயதைக்
கூட்டினால் 45 வரும். மூத்தமகனின் வயதை இரண்டால் வகுத்தாலும் இரண்டாமவனின்
வயதிலிருந்து இரண்டைக் கழித்தாலும், மூன்றாவது
மகனின் வயதுடன் இரண்டைக் கூட்டினாலும், நான்காமவனின்
வயதை இரண்டால் பெருக்கினாலும் ஒரே விடைதான் வரும்.
அவர்களின்
வயதும் தெரியும் என்றார். நான்கு
பேரின் வயதும் தனித்தனியே எவ்வளவு ?
( விடைகீழே)
2. சில மாணவிகள் பூங்காவில் மலர்கள் பறித்தனர். சென்ற மாணவிகளில் ஐந்தில்
ஒரு பங்கினர் ரோஜாப்பூவைப் பறித்தனர். ஒரு பங்கினர் மல்லிகைப்பூவைப்
பறித்தனர். இந்த இரு பகுதியினர் எண்ணிக்கையைப் போல் , மூன்று மடங்கு மாணவிகள் செவ்வந்திப்பூ
பறித்தனர். மீதமிருந்த ஒரு மாணவி மட்டும் பூ பறிக்காமல் நின்றாள். அப்படியானால் பூங்காவிற்கு
சென்ற மாணவிகள் எத்தனை பேர்?
( விடைகீழே)
3.ஒரு பேருந்து புறப்படும்போது அதில் சில பயணிகள் இருந்தனர். அடுத்த நிறுத்தத்தில் அது
நின்றபோது பயணிகளில் பாதிப்பேர் இறங்கி விட்டனர். அந்த இடத்தில் 20 பேர் ஏறினர். அடுத்த நிறுத்தத்தில் இருந்த
பயணிகளில் பாதிப்பேர் இறங்க ஐந்து பேர் புதிதாக ஏறினர். மூன்றாவது நிறுத்தத்தில்பேருந்துநின்றபோது, முதலில் இருந்த பயணிகளைப்
போல் சரிபாதி பயணிகளே இருந்தனர் என்றால் புறப்பட்ட இடத்தில் பேருந்தில் இருந்த பயணிகள்
எத்தனை பேர்?
( விடைகீழே)
4. ஆசிரியர் ஒருநாள் மாணவர்களை உயிரியல் பூஙாகாவிற்கு அழைத்துச் சென்றார். அனைத்து மாணவர்களும் பூங்காவில் இருந்த பறவைகள், விலங்குகளைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கணிதப் பிரியன் குமரனோ பறவைகள் மற்றும் விலங்குகளின் தலை, கால்களை மட்டும் எண்ணிக் கொண்டே வந்தான். பூங்காவை விட்டு வெளியே வந்ததும் ஆசிரியர் குமரனிடம், “ நீ” என்ன பார்த்தாய் எனக் கேட்டார். அதற்கு அவன் 180 தலைகள், 500 கால்கள் என்றான். இதைக் கேட்ட மற்ற மாணவர்கள் சிரித்தனர். ஆனால் ஆசிரியர் சிரிக்காமல் மாணவர்களின் மூளைக்கு வேலை கொடுத்தார். “ குமரன் சொன்னபடி 180 தலைகள், 500 கால்கள் என்றால் இங்குள்ள மிருகங்கள், பறவைகள் தனித்தனியாக எத்தனை எனக் கண்டுபிடியுங்கள் என்றார்.
பறவைகள்...............எத்தனை? விலங்குகள்..........எத்தனை?
( விடைகீழே)
( விடைகீழே)
விடை:
1. நால்வரின்வயது
மூத்தமகனின்வயது–20
இரண்டாவதுமகனின்வயது – 12
மூன்றாவதுமகனின்வயது – 8
நான்காவதுமகனின்வயது - 5
மொத்தம் – 45
2. பூங்காவிற்குச் சென்ற மொத்த மாணவிகளின் எண்ணிக்கை–15
3. 60 பயணிகள்
4. விலங்குகள் - 70 ; பறவைகள் 110
5. ஆப்பிள்பழங்கள்மொத்தம்–40
Explain 2nd one
ReplyDelete2nd question wrong... விடை 15 என்றால் முதலில் 3 பேர்.. பின்னர் 3 பேர்.. அதன்பிறகு மூன்று மடங்கு என்றால் 18 பேர் வருகிறது.. கேள்வியே தவறாக உள்ளது
ReplyDelete