சூரியன்
கிழக்கே உதிக்கும் சூரியன் பார்
கீழ்வானம் சிவப்பதைப் பார்
கருமை நீக்கும் சூரியன் பார்
கண்கள் கூசும் ஒளியைப் பார்
வெப்பம் கொடுக்கும் சூரியன் பார்
வெளிச்சம் கொடுக்கும் சூரியன்பார்
மெல்ல மெல்லநகர்வதைப் பார்
மேற்கே சென்று மறைவதைப் பார்
No comments:
Post a Comment