ரோஜாப்பூ
பாரு பாரு ரோஜாப்பூ
பாங்காய் மலர்ந்த ரோஜாப்பூ
செக்கச் சிவந்த ரோஜாப்பூ
சிந்தை அள்ளும் ரோஜாப்பூ
நேரு சட்டையை அலங்கரித்த
நேர்த்தியான ரோஜாப்பூ
அக்கம் பக்கம் முள்ளிருக்கும்
அருமையான ரோஜாப்பூ
உனக்கு ஒன்று பறித்துக்கொள்
உதிர்ந்திடாமல் பார்த்துக்கொள்
No comments:
Post a Comment