தாகம் தீர்ந்த
காகம்
தாகம் கொண்ட காகம் ஒன்று
சுற்றி சுற்றி வந்ததாம்
குடிக்க தண்ணீர் கிடைக்காமல்
மிகவும் கஷ்டப்பட்டதாம்
தண்ணீர் இருந்த ஜாடியை
கிணற்றின் அருகில் கண்டதாம்
எட்டி எட்டி பார்த்ததாம்
தண்ணீர் எட்டவில்லையே
கொஞ்ச நேரம் யோசித்து
குட்டிக் கற்களை எடுத்ததாம்
ஒன்று ஒன்றாய் போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்
சந்தோஷமாய் பறந்ததாம்....!
அருமையாக உள்ளது
ReplyDelete